205 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி



இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று ஆரம்பமானது. 

இன்றைய இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்திய அணியின் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளமை கூறத்தக்கது.