(விஷேட நிருபர்)
காத்தான்குடி முதியோர் இல்லத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 53 பேர் மரணமடைந்துள்ளதாக காத்தான்குடி முதியோர் இல்லத்தின் நிருவாகிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு அதன் 25 வருட பூர்த்தியையொட்டி நடாத்தவுள்ள வெள்ளி விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு (30.10.2017) காத்தான்குடி முதியோர் இல்ல மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த இல்லத்தின் தலைவர் சட்டத்திரணி எம்.ஐ.எம்.நூர்தீன் மற்றும் அதன் உப தலைவர்களான கே.எம்.ஏ.அஸீஸ் மற்றும் மௌலவி எம்.எச்.எம்.இக்பால் உட்பட அதன் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில்இ
காத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகின்றன.
இந்த 25 ஆண்டுகளில் இங்கு 53 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் 36 பேரது ஜனாசாக்களை காத்தான்குடியிலேயே நல்லடக்கம் செய்துள்ளோம். ஏனையோரின் ஜனாஸாக்களை அவர்களது உறவினர்கள் கொண்டு சென்று அவர்களது ஊரில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த காத்தான்குடி முதியோர் இல்லத்தில் இது வரை 224 பேர் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். தற்போது இங்கு 23 முதியவர்கள் உள்ளனர்.
அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான பொழுது போக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆண்மீக மார்க்க கடமைகளை மேற் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இல்லத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் 60க்கும் 77 வயதுக்குமிடையிலானவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
சமூக சேவை திணைக்களம் மற்றும் நலன் விரும்பிகளின் உதவியுடனேயே இவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியை யொட்டி எதிர் வரும் 12.11.2017 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நாம் வெள்ளி விழாவை நடாத்தவுள்ளோம். அதில் இலாஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் காப்பகம் எனும் சிறப்பு மலரையும் வெளியிடவுள்ளோதம் என மேலும் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment