ஏறாவூரில் உணவு விஷமானதால் 50 பேர் சுகயீனமடைந்துள்ளனர்



ஏறாவூரில் உணவு விசமடைந்ததில் 50 பேர் சுகவீனமடைந்துள்ளனர்.
அவர்களில் 30 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம் பலீல் தெரிவித்துள்ளார்.
வாந்தி, தலைவலி, வயிற்றோட்டம், உடல்வலி போன்ற குணங்குறிகளுடன் நோயாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏறாவூர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சுமார் 20 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முந்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இவர்கள் உட்கொண்ட உணவு விஷமடைந்திருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.