பியசேன கமகே புதிய உறுப்பினரானார்




வெற்றிடமான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி பியசேன கமகே இன்று காலை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். 

சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். 

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகாது என்று கடந்த 02ம் திகதி உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.