நெவெஸ்கா லேடி கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்தது.
எரிபொருள் தொடர்பான தர ஆய்வறிக்கை நேற்றுப் பகல் கிடைத்ததன் பின்னர் எரிபொருளை இறக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, மேலும் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக பெட்ரோலிய மொத்தக் களஞ்சிய தொகுதி தெரிவித்தது.
.
இந்நிலையில், தரமற்ற எரிபொருளுடன் வந்ததாகக் கூறப்படும் டோர்ம் அஸ்ட்ரிட் கப்பலும் அதிலுள்ள எரிபொருளைப் பரிமாற்ற வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.டி. யுனிக் டிவலப்பர் கப்பலும் இன்றும் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தன.


Post a Comment
Post a Comment