யாழில் போலி நாணயத்தாள் அச்சிட்ட தம்பதியினர் கைது



யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியை நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இதன்போது, 24 வயதுடைய ஒருவர் மற்றும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும், நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பிறின்டர்கள், ஸ்கேனர், மடிக்கணனி, 5,000 ரூபா நாணயத்தாள்கள் 400 மற்றும் 1000 ரூபா தாள்கள் 148ம் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் கல்வியங்காடு பகுதியில் போலி நாணயங்கள் அச்சிட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.