மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கிரேஸ் நவரெட்ண ராஜாவின் வழிகாட்டலில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் நேற்று முழு நேரமாக இடம்பெற்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாமினி அச்சுதன் தலைமையில் நடைபெற்ற இலவச முகாமில் மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோய் வைத்திய அதிகாரி அ.நவலோஜிதன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு போசாக்கு நிலை, ரத்த அமுக்கம், கண், காது, நீரழிவு, பெண்களுக்கான மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற பிரிவுகளுக்கான மருத்து பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மூன்றூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment