அதிகரித்தது, சரக்கு ரயில் கட்டணம்



ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் இன்று முதல் 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த கட்டணமாக அறவிடப்பட்டு வந்த 50 ரூபா இன்று முதல் 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
இந்த கட்டண அதிகரிப்பு 9 வருடங்களின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் வணிக முகாமையாளர் என்.ஜே. இதிபாலகே தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் அனைத்து ரயில்வே நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் வணிக முகாமையாளர் என்.ஜே. இதிபாலகே நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.