ஹட்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது வர்த்தக நிலையம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல், பிலிப் குமார் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பாரதிதாசன் நேற்று (01) கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment