டிப்ளோமா பாட நெறிக்கு விண்ணப்பம் கோரல்



சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது, இலங்கை சமூகப்பணிக் கல்லூரியில் இரு வருட கால சமூகப் பணி டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரிட்லி ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி எய்தியிருத்தல், அல்லது அரச அல்லது மாகாண அல்லது உள்ளூராட்சி சேவையில் குறிப்பிட்ட வகைக்குரியதான சில சேவைகளில் மூன்று வருடங்களுக்குக் குறையாத சேவையை திருப்திகரமாகச் சேவையாற்றுகின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். 
இதற்கான வயதெல்லை 20 முதல் 45 வயதாகும். இந்த டிப்ளோமா பாட நெறி தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழி மூலங்களிலும் நடாத்தப்படும். 
பூரணப்படுத்திய விண்ணப்பங்களை, பதிவாளர், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம், இலக்கம்: 488 ஏ, நாவல வீதி, ராஜகிரிய என்ற முகவரிக்கு இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். 
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு, 011 2882506, 011-2882507 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.