விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் பதவியில் நிலவும் 3 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை அரசசேவை ஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்கு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்களினது இணைந்த சேவையின் முகாமைத்துவ உதவியாளர் விசேட வகுப்பிலுள்ளவர்கள் 05வருடத்தை பூர்த்திசெய்தவர்கள் விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்ப முடிவுதிகதி 04.12.2017 ஆகும்.
இதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சையில் தேவையான புள்ளிகளைப்பெறும் மூவர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
விண்ணப்பப்படிவங்கள் யாவும் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுத்தபாலில் பணிப்பாளர் நாயகம், விளையாட்டு அபிவிருத்தித்திணைக்களம், 9 பிலிப் குணவர்த்தன மாவத்தை, கொழும்பு எனும் விலாசத்துக்கு அனுப்பிவைக்கவேண்டுமென விண்ணப்பதாரிகள் கேட்கப்பட் டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங் களை 17.11.2017 அரச வர்த்தமானியில் பெறலாம்.


Post a Comment
Post a Comment