மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று (15) அதிகாலையிலிருந்து பொழது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது.
ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்தப் பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன், மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம். பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment