#FarukShihan
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாக சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய இடங்களிலுள்ள கிணற்றுநீர் வற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை காரணம்காட்டி மக்கள் பீதியில் உள்ளனர்.
சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைகள் கலலைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையிலும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியாவில் 4.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் வந்துள்ளது. இருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது. சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் கடல் இயல்புநிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது



Post a Comment
Post a Comment