(சிறிஹரன்)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த வட்டமடு விவசாயிகளின் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி, 5ஆவது நாளாகவும் அக்கரைப்பற்று, மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் இன்றும் (08) சாலைமறியல் போராட்டம் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியை மறித்து, சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்தும் தடைப் பட்டது. அக்கரைப்பற்று பொலிசார், போக்குவரத்துக்கு இடையுறு விளைவிப்பதற்கு எதிராக அக்கரைப்ற்று நீதிமன்றில் இடைக் காலக் கட்டளையைக் கோரினர்.
அக்கரைப்பற்று நீதிபதி. A.பீற்றர் போல்,போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையுறு விளைவிக்க வேண்டாம் என்று வேண்டியதாலும்,தடைகளை ஏற்படுத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்தவும் கட்டளையை பிறப்பித்ததால், ஆரப்பாட்க்காரர்கள் வீதியை போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படா வண்ணம் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.


Post a Comment
Post a Comment