தென் கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய நற்புறவு அத்தியாயம் இரு நாடுகளுக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என தென் கொரிய ஜனாதிபதி முன் ஜெய்ன் (Moon Jae-in) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகும் தருணத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயம் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என முன் ஜெ இன் ( Moon Jae-in) சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளினதும் அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றமை குற்பிடத்தக்கதாகும்.
சியோல் (Seoul) நகரிலுள்ள புளூ ஹவுஸ் (Blue House ) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment