கடந்த 50 வருடங்களுக்கு மேலாக, விவசாயம் செய்யப்பட்டு வந்த வட்ட மடுக் காணிகள்,எந்த வித அலுவலக நடை முறைகளையும் பின் பற்றப் படாமல், கடந்த அரசினால்,ஒதுக்கப்பட்ட வனமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.இதனால், வட்ட மடுக் காணிகள் வன இலாகாகவினால் தடை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக,வாழ்வாதாரத்தை இழந்து வாழும் வட்ட மடு விவசாயிகள்,கடந்த 23 நாட்களுக்கு மேலாக,அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் மற்று மொரு அங்கமாக, நாளை 27ந் திகதி ஹர்தாலுக்கும், அழைப்பு விடுத்துள்ளனர் என அக்கரைப்பற்று வட்ட மடு விவசாயிகளால்,வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment