தோப்பூரைக் கலாய்த்தது,காற்றுடன் கலந்த மழை



(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், தோப்பூர் றோயல் ஜூனியர்ஸ் பாடசாலை வளாகத்திலிருந்த வாகை மரமொன்று, இன்று (29) காலை சாய்ந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சைக்கிள்கள் இரண்டு, மரத்தின் கீழ் சிக்குண்டு சேதமடைந்துள்ளனவென, பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.அனஸ் தெரிவித்தார்.