(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவின் காவத்தமுனை, மீராவோடை போன்ற கிராமங்களில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் கிராமங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.
இந்த குரங்குகள் கிராமங்களில் கூட்டம் கூட்டமாக நுழைத்து பொது மக்களின் வீடு மற்றும் தோட்டங்கள், உள்ளிட்ட சொத்துக்களுக்கும் பாரிய சேதத்தினை ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள பாடசாலையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாரிய அசொகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலைமையும் இருப்பதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு சம்பவம் கடந்த 05 மாதங்களுக்கு முன்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் மாணவர்கள் பலர் பாதிப்படைத்துள்ளனர்.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறிந்த பாடசாலையில் காலை ஆராதணைகள் நடை பெறுவது வழக்கம் மாணவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டும், பாடசாலை இயற்கை சூழலை கொண்டமையினால் திறந்த வெளியில் காலை ஆராதனை வழமை போன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக பாடசாலையில் காணப்படும் உயர்ந்த மரங்களிலும் மாடிக் கட்டடத்திலும் திடிர் என்று புகுந்த குரங்குகள் கூட்டம் அட்டகாசம் புரித்துள்ளன.
குரங்குகள் தமக்குள் சண்டையிட்டு கொண்டு அங்கிருந்த மரங்களிலும், பாடசாலை கூரைகளிலும் பாய்ந்து விளையாடியதன் காரணமாக பாடசாலையின் உயர் மாடி கட்டிடத்தில் பொருந்தப்பட்டுள்ள ஓடுகள் கழன்று மாணவர்களின் தலையிலும் உடலிலும் வீழ்ந்துள்ளன.
இதனால் இரண்டு மாணவர்கள் பலத்த காயங்களுடனும் ஏனைய நான்கு மாணவர்கள் சாதாரண உட்காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றும் வந்துள்ளனர்.
இதற்கிடையில் பாடசாலைக்கு அதிகாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் வருகை தருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது குரங்குகள் பாய்ந்து துரத்துகின்ற நிலைமை அடிக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இப் பிரதேசத்தில் குரங்குகளினால் ஏற்படுத்தப்பட்டு வரும் தொல்லைகள் குறிந்து பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும் இந்த நிலைமையினை கட்டுபாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகமும், பிரதேச சபையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment
Post a Comment