அக்கரைப்பற்றின் முதற்தர நடுவர் நுார்தீன் (Referee)காலமானார்



(#IsmailUvaizurRahman)
அக்கரைப்பற்றின் முதலாவது காதி நீதிபதியின் புதல்வரான நுார்தீன்(Referee) பின்னிரவில் காலமானார். சிறந்த உதைபந்தாட்ட வீரராக, அக்கரைப்பற்றினைப் பிரநிதித்துவப்படுத்தி, இலங்கையின் பல இடங்களிலும் உதைப் பந்தாட்டப் போட்டிகளில் கலந்து ஜொலித்தவர் அவர். உதைபந்தாட்ட நடுவராக கிழக்கின் பல இடங்களிலும் கோலோச்சியவர்.
 
இவர்  சித்தி உம்மாவின் கணவரும், பேபி,ஹனி,வஸீம் அக்ரம் ஆகியோர்களின் அன்புத் தந்தையும், முன்னாள் காழீயார் முகம்மது இப்றாலெப்பையின் மூத்த மகனும், மர்ஹூம். அப்துல் லெத்தீப் (VCO), மர்ஹூம். சல்மான்(TA), இன்பம்(சும்றா அபூபக்கர்) ஆகியோர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவரது  ஜனாசா நல்லடக்கம், இன்று ஜிம்ஆ  தொழுகையின் பின்னர், அக்கரைப்பற்றில் இடம்பெறும்

எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, உயர் சுவனத்தைக் கொடுத்திடுவானானக!