இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது



இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

இன்றைய போட்டியில் இந்திய அணி 88 ஓட்டங்களை பெற்று 2 க்கு 0 என்ற வகையில் தொடரை கைப்பற்றியுள்ளது. 

இலங்கைக்கு எதிராக இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்றது. 

இதன்போது ரோஹித் சர்மா 118 ஓட்டங்களையும் கே.எல்.ராகுல் 89 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி சார்பாக பந்து வீசிய நுவன் பிரதீப் 61 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார். 

பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. 

குசல் பெரேரா 77 ஓட்டங்களையும் தரங்க 47 ஓட்டங்களையும் பெற்றனர்.