தமிழரசுக் கட்சி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகளும் இணக்கம்



இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.