களுத்துறை மாவட்ட தமிழ் கல்வித் துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டுமென்பதுடன், இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏதாவது விஷேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் வாய் மொழி விடைக்கான கேள்வி நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு வினவினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம கல்வி வலயத்தின் கீழுள்ள கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் கல்வி கற்று வருகின்றனர்.
மேற்படி பாடசாலையில், ´அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´ எனும் வேலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கென அடிக்கல் நாட்டப்பட்டது.
நான் இது தொடர்டபில் இது தொடர்பில் கேள்வி கேட்டு தற்போது 05 மாதங்கள் கழிந்து விட்டுள்ளன. இன்றைய நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லையேல் அது தொடர்பான நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நிவாரணங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எமது மக்கள் எதிர்ப்பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தில் கணிசமான விருத்தியனைக் காண்பதற்கு எமது மக்களது சொந்த வளங்களை விடுவித்தாலே போதுமானது எனவும், டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
எமது மக்கள் சுய பொருளாதாரத்தில் முன்னேறுவது மாத்திரமின்றி, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் பக்கபலமாக இருந்து பாரிய பங்களிப்பினை வழங்குவார்கள். யுத்தத்திற்கு முந்தைய காலப்பகுதிகளில் அவ்வாறான பங்களிப்புகளை எமது மக்கள் நிறையவே வழங்கியிருக்கின்றார்கள்.
வடக்கில் காணப்படுகின்ற கடல் வளங்களில் பாரியளவு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழில்கள் காரணமாகவும், பிற மாவட்டங்களிலிருந்து அத்துமீறி நுழைகின்ற கடற்றொழிலாளர்களது வளச் சுரண்டல்கள் காரணமாகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்படுகின்ற அதே நேரம், கடல் வளங்கள், எமது மக்களின் தொழில் உபகரணங்கள் என்பன தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அதிகளவிலான கடல் வளத்தினைப் பயன்படுத்த இயலாத அளவுக்கு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் கடற்றொழிலின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன.
விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் சொந்தக் காணி, படையினரின் விவசாய செயற்பாடுகள் காரணமாகவும் எமது விவசாய மக்கள் பலரது வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டுள்ள நிலை தொடர்கின்றது.
தொடர் நிலையற்ற பொருளாதாரமான கட்டுமானத்துறையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு மணல் மாபியா காரணமாக மணலுக்கு செயற்கையான தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு. வடக்கின் கட்டுமானத்துறையானது முழுமையாகவே ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது வரவு – செலவுத் திட்டமானது நீலப் பசுமையாக இருந்தாலும், இதனை செயற்படுத்துகின்ற நிலையானது – தளமானது தற்போதைய நிலையில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.
குறிப்பாக, கடற்றொழில் மற்றும் விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், இதில் பாரியதொரு பங்களிப்பினை வடக்கு மாகாணத்தின் ஊடாக வழங்க முடியும். என்றாலும் அதற்குரிய வாய்ப்புகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதே எனது கேள்வியாகும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் முறையே இன்று வறுமை நிலைக்கு உட்பட்டுள்ள முதல் ஐந்து மாவட்டங்களாக இருக்கின்றன.
கடந்த கால யுத்தம் காரணமாக நேரடி பாதிப்புகளுக்கு அதிகளவில் உட்பட்ட மக்களாகவே வடக்கு – கிழக்கு மக்கள் உள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், இம் மக்களது மன வளத்திலும், பொருளதார வளத்திலும் விருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவை முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை, என்றார்.
இதேவேளை, நுண்கடன்கள் திட்டம் குறித்து இங்கு கருத்து வெளியிட்ட டக்ளஸ்,
யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த திடீர் நுகர்வுத் தேவைகளின் காரணமாக வடக்கில் ஏற்பட்டிருந்த உடனடி வர்த்தகப் பொருளாதாரமானது, அதிகமான பொருட் களஞ்சியங்களை உருவாக்கியதன் காரணமாக, வடக்கின் வர்த்தகத்துறையானது அதிகளவு படுகடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான எமது மக்களின் பொருளாதார பலவீனத்தை இலக்காகக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் நுழைந்துள்ள ஏராளமான நிதி நிறுவனங்கள், நுண்கடன் என்ற போர்வையில் எமது மக்களை தற்கொலைகளை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
பிரமிட் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இன்னமும் எமது பகுதிகளில் எமது மக்களை சுரண்டி வருகின்றன.
இத்தகைய பல்வேறு வகையிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுவருகின்ற எமது மக்களைக் குறிவைத்தே அரசும் தனது ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது.
எமது பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமான பனை வள உற்பத்திகளையும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில், பனங் கள் இறக்குவதற்குத தடை என ஒரு வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இத்தகைய ஏற்பாடுகள் தெரிந்து கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது, தெரியாத்தனமாக மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதே எமக்குப் புரியாமல் இருக்கின்றது, என பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment