சிறைக்கைதிகள் 510 பேர் விடுதலை



நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதியால் இன்றைய தினம் (25) விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதற்கமைய, சிறைச்சாலைகளுக்குள்ளும், திறந்த வெளி சிறைச்சாலைகளிலும் உள்ள 510 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.