சட்ட மா அதிபர்கள், திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்த்தப்படவுள்ளது



சட்ட மா அதிபர்கள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அடுத்த வருடம் முதல் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஒவ்வொருவரும் வகிக்கும் பதவி அடிப்படையில், சம்பள உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
10 வருடங்களின் பின்னர் இந்த சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உள்ள சுமார் 450 ற்கும் மேற்பட்டவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.