காலி-வலஹன்துவ,களுத்துறை-பயாகல,மாத்தறை-திக்வெல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்கள்மின்சாரம் இல்லாமல் அவதியுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் கடந்த ஐந்து நாட்களாக குறித்த மக்கள் மின்சாரம் இன்றி இருளில் கிடப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உரியவர்களுக்கு அறிவித்தும் இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரவு நேரங்களில் சிறு குழுந்தைகளுடன் இருளில் பொழுதைக் கழிக்க வேண்டியிருப்பதாகவும்,சம்பந்தப்பட்டவர்கள் இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Post a Comment
Post a Comment