விமான பயணத்தின் போது தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக தங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜைரா வாசிம் புகார் அளித்துள்ளார். ஜைரா டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
17 வயதான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில், விமானத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை அழுதுகொண்டே விவரிக்கிறார். விமானத்தில் தனது இருக்கைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டிருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுகிறார்.
பாதி தூக்கத்தில் இருந்தபோது பின்னால் அமர்ந்துகொண்ருந்த நபர், தன் பின்புறத்திலும், கழுத்திலும் தொட்டு தொந்தரவு செய்ததாக ஜைரா வாசிம் பதிவிட்டுள்ளார். விமான பணியாளர்கள் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் விஸ்தாரா,''இது குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகிறோம். இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை'' எனக் கூறியுள்ளது.
ஜைரா வாசிம் வீடியோவில் மேலும் கூறுகையில்,'' நமக்கு நாமே உதவ முடிவு செய்யாவிட்டால், யாரும் நமக்கு உதவ முன்வரமாட்டார்கள்'' என்கிறார்.


Post a Comment
Post a Comment