முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக பொது சொத்துக்கள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவு இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி கே.எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.
அன்றைய தினத்தில் குறித்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment