அக்கரைப்பற்று இப்றாகிம் ஆங்கில ஆசிரியர் காலமானார்



 #இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்.

அக்கரைப்பற்று -02 ம் குறிச்சியை சேர்ந்த இப்றாகிம் மௌலவி (ஓய்வு பெற்ற ஆசியர்) தனது 72வது வயதில் காலமானார். 

கொழும்பு சாஹிராக் கல்லுாரியில் ஆங்கில மொழியில் கற்றவர். அக்கரைப்பற்று ஆயிஸா பாளிகா,ஆண்கள் வித்தியாலயம், பள்ளிக்குடியிருப்பு பாயிஸா வித்தியாலயத்திலும் ஆங்கிலம் போதித்தவர். தமது சொந்தப் பணத்தைக் கொண்டு, ஏழை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வாங்கியும் கொடுப்பார். அதனையிட்டு அவர் அலட்டுவதே இல்லை. இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் கொடுக்கும் பரோபகாரி. செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து, செல்வச் செருக்குகள் இல்லாமல் சாதரணமாக வாழ்ந்தும் வந்தார். பள்ளிவாயல்களில் அடிக்கடி இவரைக் காணலாம்.


இவர் செயின் போடியாரின் மூத்த மகனும், நிசாயாஸ் ஹாசீம் ஆசிரியரின் சகோதரரும், ஓய்வு நிலை சிரேஸ்ட நில அளவையாளர் மொஹிதீன் பாவா இனது, மைத்துனரும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம், லுஹர் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.  

எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌவஸ் இனை அருள் பாலிக்க இறைவனை பிரார்த்திப்போமாக! ஆமீன்!