மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி



பா.திருஞானம்
 புஸ்ஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டம், ஓ.ஆர்.சி பிரிவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, மின்சார விநியோகக் கம்பி அறுந்து விழுந்ததில், 28 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த  “கலு” என்று அழைக்கப்படும் எஸ்.அருணசாந்த என்ற இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக புஸ்ஸல்லாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.