கிரிபத்கொட நகரசபை வளாகத்தில் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வெல்ல வீதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 7800 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்டுள்ள போதை வில்லைகளில் ஒன்றின் பெறுமதி 3000 ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment