(க.கிஷாந்தன்)
அட்டன் போடைஸ் பிரதான வீதியில் தரவலை காந்தி சிலைக்கு அருகாமையில் ஒரு மாத்திற்கு முன் அதிக மழை காரணமாக விழுந்த தொலைபேசி கம்பத்தினை அகற்றாமையினால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த வீதியில் சுமார் நாளாந்தம் 50 மேற்பட்ட பஸ்கள் சலங்கந்த, என்பீல்ட், போடைஸ், சாஞ்சிமலை, டயகம, அக்கரபத்தனை, உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வாகனங்களுக்கு இடமளிப்பதில் நாளாந்தம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் இரவு வேளைகளில் இவ்விடத்தில் ஆபத்தான நிலையே காணப்படுகின்றன.
தொலைபேசி கம்பம் வீதியின் பக்கம் வீழ்ந்துள்ளதால் மக்கள் பாதையின் ஓரத்தில் பயணஞ் செய்யவும் முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் இப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இது குறித்து இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.


Post a Comment
Post a Comment