"உட ரட்ட மெனிக்கே, பதுளை வரை





மலையக ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்தை இன்று முதல் மீண்டும் பதுளை வரை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

மண்மேடு சரிந்து விழுந்தமையால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து, கடந்த 29ம் திகதி முதல் நுணுஓய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. 

எதுஎவ்வாறு இருப்பினும், இன்று பகல் கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை வரை ரயில் போக்குவரத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.அபேவிக்ரம குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இரவு வேளைகளில் நாணுஓய வரை மட்டுமே ரயில் போக்குவரத்துகள் இடம்பெறும் எனவும் தெரிகிறது.