ஆணையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு



கிளிநொச்சி ஆணையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மற்றும் யாழ். கரவெட்டி பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.