சில பிரதேசங்களை பனி மூடும்



மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேங்களை காலை ​நேரத்தில் பனி மூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள கடமை அதிகாரி ஜனக குமார தெரிவிக்கையில், வளிமண்டலவியலில் நிலவும் குளிர் காரணமாக, எதிர்வரும் நாட்களில் மாலை வேளைகளில் வட, கிழக்கு பருவ மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்தார்.
மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மண்சரிவு, மண்மேடு இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல் உள்ளிட்ட நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு, கட்டட ஆராச்சி திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
காலி, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.