(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் பாய், தலையணை, போர்வைகள், தண்ணீர் போத்த்தல்கள், பால்மா போன்றன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மலையத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே இத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்கள் கருத்து தெரிவிக்கையில், தாங்கள் சிறு பிள்ளைகளுடன் வாழ்வதாகசும் 1980 காலப்பகுதியல் கட்டப்பட்ட வீடுகளிலேயே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும்? இந்த பிரதேசத்திற்கு அடிக்கடி மழை பெய்து வருவதனால் தாங்களுக்கு அந்த வீடுகளில் வாழ முடியாத சூல்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிவாணரம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தங்களுக்கு வீடுகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்தால் போதும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக எட்டு வீடுகள் தாழிறக்கத்திற்குள்ளாகி சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.


Post a Comment
Post a Comment