ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் சிலர் இன்று நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
எம் எஸ். சகாவுல்லா – நீர்கொழும்பு தொகுதிக்கான இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி. ஆர். இந்து குணதிலக, எம். நிஹால் விஜயாநந்த, ஜி.கே. உபாலி சந்திரசேன ஆகியோர் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஷத்ரிய ராஜபுத்ர வீரசிங்க மற்றும் மஹிந்த பண்டார பக்மீவெவ ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்ட அமைப்பாளராக அனில் சந்ரநாத் வீரமன் நியமிக்கப்பட்ட அதேவேளை, திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளராக வை. ஜி. பந்துல சரத்குமார நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.


Post a Comment
Post a Comment