யாழில், முற்பகல் கொள்ளை



யாழ். நகரப் பகுதியில் முற்பகல் வேளையில் வீட்டுக் கூரையை உடைத்து 50 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் - பிறவுண் வீதி - கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று (10) காலை 10.30 அளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால், வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். 

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் கூரையை பிரித்து 50 பவுண் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

தேவாலயத்திற்கு சென்ற வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது, வீடு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டனர். 

பின்னர், நகைகளைப் பார்த்த போது, அவை அங்கு இல்லை எனத் தெரிகிறது. 

இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

இதன் பிரகாரம், பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.