போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக, ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தமது வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, போக்குவரத்து அமைச்சு இந்த விடயம் குறித்து விஷேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
ஏற்பட்டுள்ள பிரச்சினையான ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வது குறித்த போட்டிப் பரீட்சை தொடர்பில், சாரதி உதவியாளர்கள் சங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நீ.எஸ்.விதானகேவினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அரச ஊழியர்கள் மாற்ற முடியாது.
இதற்கமைய, தான் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இதற்கான பணிப்புரை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் விதானகே கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும், கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகானதலையிடுமாறும் தொழிற்சங்கங்களிடம், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Post a Comment
Post a Comment