ஓய்வு நிலை நீதியரசர் A.W.A .சலாம் துாதரகப் பொறுப்பாளராகக் கடமையேற்பு



ஓய்வு பெற்ற மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மதிப்புக்குரிய அப்துல் வாகித் அப்துல் சலாம் அவர்கள் நேற்று சவூதி அரேபியாவின் தலைநகரான ஜித்தாவில் இலங்கை அரசாங்கத்தின் Consulate General ஆக கடமையேற்றுக்கொண்டார்.
நீதியரசர் அவர்கள் நமது அன்புக்குப் பாத்திரமானவரும், தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் சகோதரியும், கவிதாயினியுமான சகோதரி பிரோசா ஹுஸைன் அவர்களின் துணைவருமாவார்.
ஏற்கெனவே நீதியரசர் அவர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் Consulate General ஆக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டாலும் அவர்களது இளைய புதல்வரான முஹம்மத் அவர்கள் அகால மரணமானதால், அழகிய அவர்களது குடும்பம் ஆறாத் துயரில் மூழ்கியது.
நீதி வழுவா சேவைகள் செய்து,ஆற்புதமான தீர்ப்புக்களை வழங்கிய A.W.A சலாத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
#Ceylon24