இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யு.ஆர். டி சில்வா



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு நேற்று (10) வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வேறு வேட்பாளர்கள் எவரும் போட்டியிடாததன் காரணமாக யு.ஆர். டி சில்வா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தொடர்பான அறிவித்தலை இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா இன்று அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 42 ஆவது தலைவராக யு.ஆர். டி சில்வா செயற்படவுள்ளார்.