காலி மக்குலுவ ஜூம்மா பள்ளிவாசல் நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வெலிகம பகுதியில் இருந்து தமது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயமே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Post a Comment
Post a Comment