முள்ளிப்பொத்தானையில் நடமாடும் சேவை



-எம்.எஸ் அப்துல் ஹலீம், ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கோட்டக்கல்விப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 15 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்களுக்கான நடமாடும் சேவை, முள்ளிப்பொத்தானை அல்ஜூனியர் பாடசாலையில் இன்று (30) இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர்கள் அதிபர்களின் பதவி உயர்வு, ஓய்வூதியம், சம்பள  உயர்வு, சம்பள நிலுவை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் 250க்கும் மேற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான ஆலோசனைகளைப் பெற்றுக் கொணடனர்.
இதன்போது, பிரதம வளவாளராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.முனவ்வரா நளீம், வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜெம்சீத் கலந்துகொண்டனர்.