அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்தியர்கள் அதிகாரிகளின் சங்கத்தின் உதவி செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை, 24 மணித்தியாலங்கள் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை தேசிய நீ்ர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று காலை 9 மணிமுதல் 4 மணித்தியாலய அடையாள பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்து.
சம்பள உயர்வை கோரி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை ரயில் சாரதிகள் மற்றும் ரயில் பாதுகாப்பாளர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
பெப்ரவரி 15 ஆம் திகதி வரை எவ்வித தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது,


Post a Comment
Post a Comment