(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மாவனெல்ல பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக அட்டன் நகரம் சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 11.01.2018 அன்று காலை 7 மணியளவில் அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள் ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment