கோவிலில் கொள்ளை



வவுனியா குருமன்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை என்பன இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸாரிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. 

திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. 

கோவிலில் பணம் மற்றும் நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகம் திருடர்களால் எடுத்துச்செல்லப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பெட்டகம் கோவில் அருகிலிருந்த கிணற்றில் போடப்பட்டிருந்தது. 

பொலிஸார் குறித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குருமன்காடு கோவிலுக்குள் நுழைய தடைவிதித்துள்ளது.