மதுபானங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து



மதுபானங்கள் தொடர்பாக கடந்த வாரங்களில் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளையும் இரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இன்று அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.