ரோசி சேனநாயக்க விபத்தில் சிக்கினார்



கொழும்பு மாநகர சபையின் ​ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான  ரோசி சேனநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்​தை-கோகிலாபுர பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற திடீர் விபத்து காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.