உன்னஸ்கிரியவில் மயானத்திற்கு மேல் நிர்மாணிக்கப்படும் வீடுகள்



மாத்தளை மாவட்டத்தின் உன்னஸ்கிரிய தோட்டப்பகுதியில், 16 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மயானத்திற்கு மேலாக வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், புதைக்கப்பட்ட சடலங்களின் எச்சங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும்
பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், இது அபாயகரமான சரிவான பகுதி என்பதுடன், வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருத்தமற்றது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், வீடுகள் தரமற்ற வகையில் நிர்மாணிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.