நாகசேனை தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக



(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை தோட்டத்தில் தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக அத்தோட்ட மக்கள் வைத்திய அதிகாரியின் உருவ பொம்மை மற்றும் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் 05.01.2018 அன்று ஈடுப்பட்டுள்ளனர்.
நாகசேனை தோட்ட வைத்தியர் அத்தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு உரிய வைத்திய சேவைகளை மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், சுகாதார நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொள்வதில்லை எனவும் குற்றம் சுட்டிக்காட்டப்பட்டு சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அத்தோடு இந்த தோட்ட வைத்தியர் தொழிலாளர்களுக்கு எதிராக தேவையற்ற விடயங்களில் தலையிட்டு அவர்களை பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஆர்ப்பாட்டகாரர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை தோட்ட நிர்வாகம் இந்த தோட்ட வைத்திய அதிகாரியை தோட்டத்திலிருந்து விலக்க தொழிலாளர்களால் வேண்டுக்கோளும் விடுக்கப்பட்டுள்ளது.
உரிய காலப்பகுதியில் வைத்தியர் தொடர்பான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள் ஈடுப்படபோவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.