புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் மரணமான சம்பவத்தை அடுத்து அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி, உடன் அமுலுக்கு வரும் வகையில், மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
50 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் சிறைக்கூண்டுக்குள்ளேயே, அவ்விளைஞன் தற்கொலைக் செய்துகொண்டார்.
சம்பவத்தில், ஹப்புத்தளையைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு தற்கொலைச் செய்துகொண்டார்.
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்தே, புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் ஜயசுந்தர, , இடமாற்றப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment